Sunday, 21 April 2013

புதிய பாதைக்கான போர்ப்பயணம் வெல்லட்டும்


R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

 

இன்றைய உலகில் மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளும் முதலாளித்துவ ஆட்சி முறைகளும் மக்களின் உரிமைகளைப் பறித்து வாழ்க்கை முறைகளை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும் புதிய பொருளாதாரக் கொள்கையும் மக்களை வாழ்வதற்கு வழியின்றி செய்கின்றது.

கல்வி கற்பதற்கும் வழியில்லை. கற்றவருக்கும் வேலையில்லை! விலைவாசியோ விண்ணை முட்டுகின்றது! சராசரி வருமானம் உள்ளவரே வாழ வழியில்லை! இந்திய ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் இன்றி ஊழலில் மூழ்கித் திளைக்கின்றனர். மக்களுக்கு கல்வி, வேலை, உணவு இருப்பிடம், சுதந்திரம் இவற்றை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை. நாட்டின் இறையாண்மையும் சுதந்திரமும் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. பொது விநியோக முறையும் சீரழிக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் கிடைப்பதே அரிதாகிவிடும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட இடதுசாரிகள் உணவுப்பாதுகாப்புக்கான மசோதா வேண்டியும், மக்களைக் காக்கும் அரசை உருவாக்கும் புதிய பாதைக்கான போர்ப்பயணத்தை மக்களிடம் கொண்டு செல்ல டில்லியில் மார்ச் 19-ல் நடத்திய பிரகடனப் போர் முழக்கம், அங்கு திரண்ட மக்களால் பெரும் வெற்றி பெற்றது. மக்கள் பிரச்சனைக்கான புதிய போர்ப் பயணத்தில் அசோக் லேலண்ட் தோழர்களும் பங்கேற்றது நமது தொழிலாளர்களுக்குப் பெருமை சேர்த்த பயணம். வெல்லட்டும் மக்கள் இயக்கம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா