Sunday, 21 April 2013

திருக்குறள்


அ.பன்னீர்செல்வம் 261/36354

 

ஈரடியால் உலகளந்து

      மக்கள் நாடியெனும் குணமறிந்து

அறம் பொருள் இன்பமதை

      பாயிரத்தின் முகவுரைக் கொண்டு

            தமிழ் அகராதியாய்த் தொகுக்க


நிலையற்ற வாழ்வு தனில்

      நீதியை வித்திடவே!

ஊழ்வினை அகற்றி

      வாழ்வினைப் புகட்ட வந்த

      பொய்யா மொழியாய்!

மனுநீதி தத்துவமும்

      மகத்துவம் குன்றிட

            குறள் நெறிப் பாதையிலே

மத இன மொழி கடந்து

      மக்களை நன்னெறியில்

            நிலைபெறச் செய்திட!

உலகப் பொதுமறையாய்

      மலர்ந்திட்ட மறைநூலே

பதினென் கீழ்க்கணக்கிலே

      ஒன்றான வரலாறு!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா