Sunday, 21 April 2013

குஜராத்தின் மறுபக்கம்


கி.சுரேஷ், 270/38313, சேசிஸ் அசெம்பிளி

 

வரலாற்றில் உண்மையாகப் போராடியவர்களை மறைப்பதும் உண்டு. போராட்டத்தை நசுக்கியவர்கள் இடம் பிடிப்பதும் உண்டு. ஹிட்லரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எது என்று கேட்டால் ஒரு தரப்பினர் சொல்வது (சொல்ல வைப்பது) குஜராத். அந்த மாநிலம் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு அடைந்து விட்டதாகவும், இந்தியாவின் வளர்ச்சியே குஜராத்தின் வசம் இருப்பது போலவும் சில ஏகாதிபத்திய நாடுகளும், அதற்குச் சேவை செய்யும் ஊடகங்களும் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றன.


      உலகமய, தாராளமய, தனியார் மயக் கொள்கைகளைத் தொடர்ந்து தீவிரமாக அமுல்ப்படுத்தி வருகிறது மத்திய அரசு. இதற்கு எந்த மாநில அரசும் தப்புவதில்லை. காரணம் மைய அரசின் குவிக்கப்பட்ட அதிகாரம், மாநில அரசுகளுக்கு 80% நிதித் தேவைகளை அது ஒதுக்குகிறது. உலக வங்கி, ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிதி சார்ந்த அமைப்புகள், மானிய வெட்டு, பொதுத்துறையை தனியார்மயம் ஆக்குவது வளர்ச்சி என்று மூன்றாம் உலக நாடுகளில் நிர்பந்தம் செய்கிறது. இதை சற்றும் எதிர்க்காமல் முழுவதுமாக அமுல்படுத்தும் மாநிலம் நரேந்திரமோடியின் குஜராத். விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து. விவசாயத்தை அழித்து, விவசாயிகள் கடனிலும், வறுமையிலும் சிக்கி மாண்டு வருகின்றனர்.

 
    
2003-2007
ஆம் ஆண்டுகளில் 489 விவசாயிகளும், 2008-2012 112 விவசாயிகளும், 2012 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 40 விவசாயிகள் வறுமை காரணமாக குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டனர் (ஆதாரம்: ஊழ்ர்ய்ற் ப்ண்ய்ங், ஙஹழ்ஸ்ரீட் 13 ற்ர் தபஐ). குஜராத்தில் உண்மையான வளர்ச்சி என்பது அந்த மாநில மக்களுக்கு அல்ல. அங்கு முதலீடு செய்யும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டுமே. இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்த்து, நல்ல நிலையில் இருந்த பருத்தி உற்பத்தி நலிவடைந்துள்ளது.

      விவசாயம் இப்படி என்றால் தொழில் துறையிலும் போலியான வளர்ச்சி விகிதமே காட்டப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மொத்த முதலீடு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட தொகை ரூ.20 லட்சம் கோடி. உண்மையில் முதலீடு செய்தது ரூ.29,813 கோடி (ஆதாரம்: நர்ஸ்ரீண்ஹப் ங்ஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ ள்ன்ழ்ஸ்ங்ஹ் 2011) இதே ஆண்டு 8300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (ஙஞமந) போடப்பட்டன. அமுலுக்கு வந்தது 250 மட்டுமே. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல இடங்களில் விவசாய நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாறின. ஆனால் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. 2011ம் ஆண்டு சநநஞ ரிபோர்ட் கூறுவது, கடந்த 12 ஆண்டுகளாக குஜராத்தில் நிரந்தர வேலை வேலை உருவாக்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் (ஙண்ய்ண்ம்ன்ம் ஜ்ஹஞ்ங்ள்) கூலியாக நகரத்தில் ரூ.106\-ம், கிராமத்தில் ரூ.82\-ம் உள்ளது. இது தேசிய சராசரியை விட மிகவும் குறைவு (கேரளா ரூ.218). நிரந்தர வேலை என்பது நிரந்தரமாக மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் அத்துக்கூலிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

      கடந்த 15 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, ஊதியம், நுகர்வு புள்ளி என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கிய மாநிலமாக திகழ்கிறது குஜராத். (ஆதாரம்: மத்திய அரசின் புள்ளியல் அமைச்சக தகவல்)

      நாட்டையே உலுக்கிய கோத்ரா சம்பவம், அங்கு சிறுபான்மை சமூகத்தினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம். இவ்வளவு மோசமான நிலையில் குஜராத்தில் மோடி தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது, இந்திய அரசியல் கட்டமைப்பில் தேர்தல் பல உண்மைகளை மறைத்து விடுகிறது. மக்கள் நலன் பாராமல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கும் கட்சிகள் ஒரு காரணம். மோடிக்கு எதிரான வலுவான இடதுசாரி மாற்று அங்கு வளராமை, சிறுபான்மையினரின் அச்சமும் மோடி தொடர்ந்து வெற்றி பெற காரணங்கள்.

அமெரிக்கா, பிரிட்டன் மோடிக்கு விசா மறுத்தாலும், இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் கோத்ரா கொடுஞ்செயல் புரிந்த மோடி என்று இரட்டை வேடம் போடுகிறது. நம் நாட்டை அந்நிய நாட்டுக்கு அடகு வைப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள பிரதமர் உள்ளிட்டவர்களை, நமது நாட்டுப் பெரு முதலாளிகளும், அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும், தீர்மானிக்கும் நிலை உள்ளது. வளர்ச்சி என்பது உழைக்கும் மக்களின் வளர்ச்சியே. குஜராத்தை கூறுபோட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரி மோடி கூறுவது வளர்ச்சி அல்ல. உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். மாறாதது என்பது எதுவுமில்லை. இதுவும் கடந்து போகும். மக்கள் எழுச்சி ஏற்பட்டு மாற்றம் வரும் காலம் வெகுதூரம் இல்லை.

7 comments:

  1. //ஹிட்லரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.//
    ஸ்டாலின்களையும் யாரும் மறக்கமாட்டார்களே!

    ReplyDelete
  2. //இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எது என்று கேட்டால் ஒரு தரப்பினர் சொல்வது (சொல்ல வைப்பது) குஜராத்.//
    யார் சொல்ல வைத்து யார் சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்?

    //2003-2007ஆம் ஆண்டுகளில் 489 விவசாயிகளும், 2008-2012 112 விவசாயிகளும், 2012 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 40 விவசாயிகள் வறுமை காரணமாக குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டனர்//

    நீங்கள் சொல்லும் அதே 2007 குறித்து உங்கள் அனுதாபியான The Hindu என்ன சொல்கிறது என்று
    http://www.hindu.com/2007/11/13/stories/2007111352250900.htm இந்த லிங்குக்குச் சென்று பாருங்கள் தோழர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற இடதுசாரிகள் பலமாக இருக்கும் மாநிலங்கள் Group 1ல் இருக்கின்றன. குஜராத் Group 3லேயே இருக்கிறது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //மோடிக்கு எதிரான வலுவான இடதுசாரி மாற்று அங்கு வளராமை, சிறுபான்மையினரின் அச்சமும் மோடி தொடர்ந்து வெற்றி பெற காரணங்கள்.//

    அப்படியா? ஏன் வளரவில்லை. நீங்கள் அந்த அச்சத்தைப் போக்க வேண்டியதுதானே!

    கொஞ்சம் அப்படியே இந்தியா டுடேவின் இந்த http://indiatoday.intoday.in/story/narendra-modi-wins-over-muslim-electorate-in-gujarat/1/238743.html லிங்கையும் பாருங்களேன்.

    சே... எல்லாரும் பொய் சொல்றாங்க இல்ல தோழர். பாவம் நீங்க மட்டும்தான் உண்மைய குத்தகைக்கு எடுத்திருக்கீங்கனு யாருக்கும் தெரியல.

    ReplyDelete
  5. //நாட்டையே உலுக்கிய கோத்ரா சம்பவம், அங்கு சிறுபான்மை சமூகத்தினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம். இவ்வளவு மோசமான நிலையில் குஜராத்தில் மோடி தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது, இந்திய அரசியல் கட்டமைப்பில் தேர்தல் பல உண்மைகளை மறைத்து விடுகிறது.//

    எப்படி நீங்க நினைப்பது மாதிரி ஒரு கொலைகாரனையே மக்கள் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள்? உங்களைப் போன்ற நல்லவர்களை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை?

    கோத்ரா சம்பவத்தின் உண்மைக்கதை என்பது எத்தனை பேருக்கு தமிழகத்தில் தெரியும் என்பது தெரியவில்லை. இதைச்சொல்லியே உங்களைப் போன்ற முற்போக்காளர்கள் உங்கள் நடுநிலமையைக் காட்டிக் கொள்கிறீர்கள். அந்த உண்மைச் சம்பவம் என்ன என்பதை விக்கியின் இந்த http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 லிங்கைக் காட்டி மக்களுக்கு அறியச் செய்யுங்கள் பார்ப்போம். விக்கியும் காவி பயங்கரவாதியா தோழர்.

    ReplyDelete
  6. //குஜராத்தை கூறுபோட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரி மோடி கூறுவது வளர்ச்சி அல்ல. உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். மாறாதது என்பது எதுவுமில்லை.//
    இடதுசாரிகள் ஆண்ட மாநிலங்களின் வளர்ச்சியை சற்று கவனத்தில் கொள்ளுங்கள் தோழர். எல்லாம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ தானா?

    //இதுவும் கடந்து போகும். மக்கள் எழுச்சி ஏற்பட்டு மாற்றம் வரும் காலம் வெகுதூரம் இல்லை.//

    ஆமாம் மக்களே, கர்த்தர் (ஏதாவதொரு இடதுசாரி சர்வாதிகாரி) வந்து உங்களையெல்லாம் ரட்சித்து (அடக்கி ஆண்டு) பரலோக ராஜ்ஜியத்தை (கம்யூனிச பொன்னுலகத்தை) நிறுவிவிடுவார்.

    ReplyDelete
  7. இதுவரை பா.ஜ.க. சாராத, அல்லது அதை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் தரும் செய்தியையே உங்களுக்கு மறுமொழியாகக் கொடுத்திருக்கிறேன்.

    இனி... திரு.சரவணன் தங்கதுரை எழுதிய "மோடியின் குஜராத்" புத்தகத்திலிருந்து சில குறிப்புகளையும் பாருங்களேன்.

    பக்.16 – மற்ற மாநிலங்கள் எல்லாம் மின்சாரத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது , குஜராத்தில் மட்டும் எப்படி மின்சாரம் உபரியாகக் கிடைக்கிறது?
    பக்.18 – முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2559 மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது, இதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு மின்வினியோகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்ததன் மூலம் குஜராத் மாநிலம் எத்தகைய சூழ்நிலையிலும் முழுமையாக இருளில் மூழ்காது என்ற நிலை ஏற்பட்டது.
    பக்.24 – குஜராத் அரசு 2009-ம் ஆண்டு சூரிய சக்திக் கொள்கையை அறிவித்தது. இது தனியார் முதலீடுகளை இத்துறைக்கு ஈர்ப்பதர்கு ஏதுவாக அமைந்தது. சுமார் 87 தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்துக்கு கொண்டுவந்ததோடு சுமார் 961.5 மெகாவாட் அளவு மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
    பக்.32 – இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதமாக இருக்கும் நிலையில் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளாக 9.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
    குஜராத் பருத்தி , சீனா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்யப்படுகிறது. சீனாவில் போய் “குஜராத்” என்று சொன்னால் அவர்கள் பருத்தி என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சீனாவில் குஜராத் பிரபலமாகிவிட்டது.
    பக்.41 – குஜராத் மாநிலத்தைப் பொருத்தமட்டில் 2000-01ம் ஆண்டு நிலவரப்படி ஒன்றாம் வகுப்பி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்புக்கு முழுக்குப் போட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.93 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2010-11ம் ஆண்டில் 2.09 சதவீதமாகக் குறைந்தது.
    பக்.43 – “ஓர் ஆண் கல்வி கற்பதால் ஒரு வீட்டுக்குத்தான் பயன். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பதால் இரண்டு வீடுகள் பயனடைகின்றன” என்கிறார் நரேந்திர மோடி.
    பக்.129 – ஜன26, 2001. இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா