Tuesday, 15 October 2013

பொது நலன் வழக்கு



பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

            பொதுவாக, மக்கள் நலன் பாதிக்கப்படும் போது தொடுக்கப்படும் வழக்குதான் பொது நலன் வழக்கு. பொது நலன் வழக்குக்கு முன்பு லோகஸ் ஸ்டான்டி (கர்ஸ்ரீன்ள் நற்ஹய்க்ண்) வழக்கு என்று இருந்தது. இதன் பிறகு உருவானதே பொது நலன் வழக்கு. இதை ஆங்கிலத்தில் ஐய்ச்ழ்ண்ஞ்ம்ங்ய்ற் ர்ச் டன்க்ஷப்ண்ஸ்ரீ \ ஏன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் என்று கூறுவர். அதாவது அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தொடுக்கப்படும் வழக்கு என்று பொருள்படும் (யண்ர்ப்ஹற்ண்ர்ய் ர்ச் ஊன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் தண்ஞ்ட்ற்ள்).


            என்ன பொது நலன், எவை பொதுநலன் என்று ஆய்ந்து பார்க்கும்போது குழந்தைகள் தன் பலத்தை மீறி புத்தகம் சுமந்து செல்வார்கள். இதன்மூலம் அவர்கள் உடல்நலம் பாதிக்கும். இதற்கு பொது நலன் வழக்கு போடலாம். மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசுபடும். இதற்கு பொது நலன் வழக்கு போடலாம். இது போன்ற பல காரணங்களுக்கு பொதுநலன் வழக்கு தொடுக்கலாம். பொது நலன் வழக்குகளில் முக்கியமான வழக்குகளாக போபால் விஷவாயு வழக்கு, கங்கை நீர் அசுத்தம் தடுக்கும் வழக்குகளைக் குறிப்பிடலாம்.

            உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்குகளைத் தொடுக்கும்போது அது அழ்ற்ண்ஸ்ரீப்ங் 226ல் வரும். உச்சநீதிமன்றம் என்றால் பிரிவு 32ல் வரும். பொது நலன் கருதி யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம். ஆனால் அது பொது நலனில் வர வேண்டும். இல்லையென்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.

            இந்திய அளவில் பல முக்கியமான பொது நலன் வழக்குகளைத் தொடுத்தவர்கள் எம்.சி.மேத்தா மற்றும் எஸ்.பி.குப்தா ஆவர். அவர்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். பொது நலன் வழக்கு (டஐக) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் நீதிபதி கிருஷ்ணய்யர். பொது நலனை யொட்டி நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினால் கூட அதை பொது நலன் வழக்காக எடுத்துக் கொள்ளலாம்.

            வழக்கு தொடுக்குமுன்பு நாம் போடும் வழக்கு, பொது நலன் கீழ் வருமா என்று சிறந்த அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மற்ற பிரிவில் வழக்குத் தொடுப்பதைக் காட்டிலும் டஐக-ல் வழக்கு போட்டால், காரணமும் சரியாக இருந்தால், அது நிச்சயம் வெற்றி பெறும். 

            பொது நலன் வழக்கு தொடுப்போம்! பொது நலன் காப்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா