B.சையத் இப்ராஹிம்
ஏற்றுமதி குறைஞ்சு போச்சு ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாச்சி ஞானத்தங்கமே
அந்நிய செலாவணி பற்றாக்குறை ஞானத்தங்கமே
ரூபாய் மதிப்பில் கைவைத்தது ஞானத்தங்கமே
மூலப்பொருள் இறக்குமதி ஞானத்தங்கமே
உற்பத்தியைப் பெருக்க வேண்டும் ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாகியும் ஞானத்தங்கமே
உற்பத்தியோ உயரவில்லை ஞானத்தங்கமே
வெளிநாட்டு நுகர்பொருள் தான் ஞானத்தங்கமே
விரைந்திங்கு கிடைக்கிறது ஞானத்தங்கமே
நம் நாட்டு உற்பத்தியோ ஞானத்தங்கமே
காணாமல் போனதுவே ஞானத்தங்கமே
வெளிநாட்டு கடன்கள் தான் ஞானத்தங்கமே
விண்முட்டும் அளவானது ஞானத்தங்கமே
வட்டி கட்டி மாளவில்லை ஞானத்தங்கமே
இனி வருமோ நமக்கெதிர்காலம் ஞானத்தங்கமே
நம்முடைய பொதுத்துறைதான் ஞானத்தங்கமே
நாட்டை கவசமாகக் காக்குது ஞானத்தங்கமே
திரை கடலோடி பெற்ற அந்நிய செலாவணி -
தேசம்
திவாலாகாமல் காத்து நிற்குது ஞானத்தங்கமே
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா