Showing posts with label 2013 10 October. Show all posts
Showing posts with label 2013 10 October. Show all posts

Tuesday, 11 March 2014

கடவுளைக் கண்டேன் - முகநூலில் இருந்து…

      ஒரு சின்னப் பையன் கடவுளைப் பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும், மதிய உணவையும் பையில் எடுத்துக் கொண்டான்.
      காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன், சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மணி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதைப் பார்த்து கொண்டே இருந்தார்.
      நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே, தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றெண்ணி தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கிக் குடித்தாள்.
      அந்தச் சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையைப் பார்த்ததில்லை. அதனால் திரும்பவும் அவள் புன்னகையைப் பார்க்க, தான் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்துக் கொடுத்தான்.
      அந்தப் பாட்டியும் மீண்டும் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அடிக்கடி ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டே இருந்தனர்.
      நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு. அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டெனத் திரும்பி குடுகுடுவென்று ஓடிச் சென்று பாட்டியைக் கட்டி அணைத்தான். பாட்டி அவன் செயலைப் பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.
      சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும், அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதைப் பார்த்த அவன் அம்மா ``என்ன நடந்தது?'' என்று கேட்டாள். ``நான் மதியம் கடவுளுடன் சாப்பிட்டேன்'' என்றான். கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.
      அதே நேரம் அந்தப் பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது, ``என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?'' என்று அவள் மகன் கேட்டான். ``இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்'' என்றாள். ``அது மட்டுமல்ல, நான் நினைத்ததை விட கடவுள் மிகச் சிறிய வயது கொண்டவராக இருந்தார்'' என்றாள்.
      கடவுளை வேறெங்கும் தேடாதீர்! அறிமுகம் இல்லாதவரிடம் ஒரு சிறு புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள்!

Tuesday, 15 October 2013

அக்டோபர் 2013 இதழ் மின்புத்தகமாக

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 14

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இசை கற்பித்தல் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுவது போல் தோன்றுகிறது. கால மாற்றத்தில் இதைத் தவிர்க்க முடியாதா?
JS: ஏன் தவிர்க்க வேண்டும்? இசைக்கு இடையூறு நேரா வண்ணம் தொழில்நுட்பம் கட்டாயம் தேவை. Mono-Stereo-Dolby-Atmos போன்ற ஒலிநுட்பங்களும், Orchestration - Orchestra - Studio ஆகியவற்றிலிருந்து சுருங்கி வீடே Studio-வாக மாறும் நிலையும் வந்துவிட்டது. ஆனால், எங்கே ஆத்மார்த்தமான இசையைத் தொலைக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குரு-சிஷ்ய பாரம்பரியம் தொலைவது நல்ல இசைக்கு அழகல்ல!

நாம் உண்ணும் காய்களின் பயனறிவோம்



E.கருணாகரன் 264/L460, Auto Engine Dressing

அவரைக்காய் : பெருங்குடல் சம்பந்தமான பிரச்சனை தீரும்.
பீன்ஸ் : சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனை தீரும்.
கருணைக்கிழங்கு : மூல வியாதி குணமாகும்.
காரட் : தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பொன்னிறமாகும்; புற்று நோயைத் தடுக்கும்; கண்ணுக்கு நல்லது.

நீ தான் என் மகள்



S.கெஜராஜ், 375/K700 Mechatronics

            பேரக் குழந்தையைப் பார்க்கும் ஆவலுடன் என் சம்பந்தி வீட்டுக் கதவை மெல்ல தட்டினேன். ``யாரது...?'' என்று மறுமுனையில் இருந்து வந்த சத்தத்திலேயே என் பெண்ணுடைய மாமியார் என்பதை உணர்ந்து கொண்டேன். பாதி கதவு திறந்த நிலையில், ``ஓ... நீங்களா!'' என்று ஒரு அலட்சியம் மற்றும் ஆணவப் பார்வை அவர் முகத்தில் தெரிந்தது.

ஒரகடம் நிலப் பிரச்சனை… தொழிலாளர்கள் கவனத்திற்கு!



      ஒரகடம் பகுதியில் லேலண்ட் தொழிலாளர்கள் வாங்கிய இடத்தை அரசு ஒரு அமெரிக்க கம்பெனிக்கு சட்டத்தை மீறி விற்றுள்ளது. அதை எதிர்த்து தாசில்தார் உதவியுடன் தொடரப்பட்ட வழக்கு வெற்றி பெற்று, தமிழ்நாடு லேண்ட் அக்விசிஷன் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் ஆக்ட் 1977ன் படி நஷ்ட ஈடாக ரூ.1 ணீ லட்சம் கிடைக்க வழி பிறந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் திரு.விஸ்வநாதன் அவர்களை (ஓய்வுபெற்ற ரோடு டெஸ்ட் தொழிலாளி)  செல்: 9840779884 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஞானத்தங்கமே!



B.சையத் இப்ராஹிம்

ஏற்றுமதி குறைஞ்சு போச்சு ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாச்சி ஞானத்தங்கமே
அந்நிய செலாவணி பற்றாக்குறை ஞானத்தங்கமே
ரூபாய் மதிப்பில் கைவைத்தது ஞானத்தங்கமே
மூலப்பொருள் இறக்குமதி ஞானத்தங்கமே
உற்பத்தியைப் பெருக்க வேண்டும் ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாகியும் ஞானத்தங்கமே
உற்பத்தியோ உயரவில்லை ஞானத்தங்கமே
வெளிநாட்டு நுகர்பொருள் தான் ஞானத்தங்கமே
விரைந்திங்கு கிடைக்கிறது ஞானத்தங்கமே
நம் நாட்டு உற்பத்தியோ ஞானத்தங்கமே
காணாமல் போனதுவே ஞானத்தங்கமே
வெளிநாட்டு கடன்கள் தான் ஞானத்தங்கமே
விண்முட்டும் அளவானது ஞானத்தங்கமே
வட்டி கட்டி மாளவில்லை ஞானத்தங்கமே
இனி வருமோ நமக்கெதிர்காலம் ஞானத்தங்கமே
நம்முடைய பொதுத்துறைதான் ஞானத்தங்கமே
நாட்டை கவசமாகக் காக்குது ஞானத்தங்கமே
திரை கடலோடி பெற்ற அந்நிய செலாவணி - தேசம்
திவாலாகாமல் காத்து நிற்குது ஞானத்தங்கமே

பொது நலன் வழக்கு



பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

            பொதுவாக, மக்கள் நலன் பாதிக்கப்படும் போது தொடுக்கப்படும் வழக்குதான் பொது நலன் வழக்கு. பொது நலன் வழக்குக்கு முன்பு லோகஸ் ஸ்டான்டி (கர்ஸ்ரீன்ள் நற்ஹய்க்ண்) வழக்கு என்று இருந்தது. இதன் பிறகு உருவானதே பொது நலன் வழக்கு. இதை ஆங்கிலத்தில் ஐய்ச்ழ்ண்ஞ்ம்ங்ய்ற் ர்ச் டன்க்ஷப்ண்ஸ்ரீ \ ஏன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் என்று கூறுவர். அதாவது அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தொடுக்கப்படும் வழக்கு என்று பொருள்படும் (யண்ர்ப்ஹற்ண்ர்ய் ர்ச் ஊன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் தண்ஞ்ட்ற்ள்).

காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு…



இனியவன் ஜி.ஸ்ரீதர், 256/38176

ப்ரீபெய்டும்
போஸ்ட் பெய்டும் வந்தது...
கடிதம் காலாவதி ஆனது!
மின்னஞ்சலும்
குறுஞ்செய்தியும் வந்தது...
தந்தி தொலைந்து போனது!
ஏர்டெல்லும்
ஏர்செல்லும் வந்தது...

அக்குபங்சர் - வாழ்வியல் மருத்துவம் - 7

ஹீலர் ஆர்.மாதவன், D.E.C.E., M.Acu., 353/37026
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர்,
செல் : 9840732871

தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா
      மனித உடம்பின் ஆரோக்கியத்தில் தோல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளுறுப்புகளுக்கு பிராண சக்தியைக் கொடுக்கிறது. உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்கு படுத்துகிறது. தோலின் வாயிலாகத்தான் உடம்பின் கழிவுப் பொருட்களும், பழுதடைந்த செல்களும் பெருமளவில் வெளியேற்றப்படுகின்றன.

தீர்வு எப்போது?

M.ஆதிகேசவன், 264/J066

            மூன்று லட்சம் மக்கள் வசிக்கும் திருவொற்றியூரில் மக்களின் வாழ்வாதார திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் மக்கள் அல்லலுறும் நிலை உள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, பாதாளச் சாக்கடைப் பணி, குடிதண்ணீர் திட்டம், உட்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகள், மெட்ரோ ரயில் திருவொற்றியூர் வரை என அடிப்படையான கனவு திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Boss - புதுவரவு

ஆனந்த நாராயணன் 275/L192

            அசோக் லேலண்ட் நிறுவனம், தன் புதிய இடைநிலை வணிக வாகனமான (ஐசிவி) பாஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ட்ரக்கின் வலிமையும் ஒரு காரின் வசதியும் ஒருங்கிணைந்த வாகனமாக திகழ்கிறது பாஸ்.

            செயல்திறன், வசதி, நம்பகத்தன்மை போன்றவைகளின் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது பாஸ். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் லாபத்தை உறுதிப்படுத்துவதுடன் எங்களுக்கும் ஒரு கேம் சேஞ்சராக (எஹம்ங் இட்ஹய்ஞ்ங்ழ்) இருக்கும் என்று அறிமுக உரையில் கூறினார் அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி.

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்



அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்


  • தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அது மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
  • ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால், மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து, அதில் மிளகுப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
  • ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
  • வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட வடித்த கஞ்சியை சாப்பிட உடனே குணமாகும்.

மருத்துவப் பொன்மொழிகள்



B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822
தண்ணீரைப் பற்றி

  • தூய தண்ணீர் உலகின் முதல் மாமருந்து
  • நீரின்றி வானும் இல்லை; வையகமும் இல்லை.
  • அருஞ்சுனை நீருண்ண, அப்போதே நோய் தீரும்.
  • ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும்,
  • ஊற்று நீர் கபம் போக்கும், சோற்று நீர் (பழுது) மூன்று போக்கும்.
  • உணவும் தண்ணீர், உண்ண வைப்பதும் தண்ணீர்!

நிலை என்ன?



தனசம்பத் 255/J144

பயிர் வளர்க்கும் கழனியிலே
            பாய்ச்சுகிற நீர் அதுவும்
வேரிடம் செல்லாது
            வேறிடம் சென்று விட்டால்
விளைச்சலை எதிர்நோக்கும்
            விவசாயி நிலை என்ன?
வாக்குறுதி அள்ளி வீசி

தலையங்கம்

            இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் மனநிலையைத் தெரியப்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு நடந்துள்ள இத்தேர்தலில் 67.52% மக்கள் வாக்களித்தார்கள். அதில் தமிழ் தேசியக் கூட்டணி 80% வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது. மக்களின் இந்தப் பங்கேற்பு, அவர்கள் தங்கள் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வு உருவாக விரும்புவதைக் காட்டுகிறது. அவர்களது தீர்ப்பு, தங்கள் நலன்களுக்காக நிற்கக்கூடியது தமிழ் தேசிய கூட்டணிதான்; ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி அல்ல என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறது.

காதலா… இது காதலா…

S.சுகுமார், 266/C858

            சில்லென்ற கடற்காற்று மேனியைத் தழுவிச் சென்ற போதும் உடலெல்லாம் தகித்துக் கொண்டிருந்தது ரேவதிக்கு. வெகு நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரகு இன்னும் ஏன் வரவில்லை? மென்மையான அவளது மனது பாறையாகக் கனக்க, கலக்கமுற்று ரகு வருகிறானா என்று ரேவதியின் கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டே இருந்தது. தூரத்தில் ரகு வருவதைப் பார்த்து மகிழ்ந்தாலும், அவனைப் பார்க்காதது போல தலையைக் கவிழ்த்து ஏதோ யோசனையில் இருப்பதைப் போல் நடித்தாள் ரேவதி.

படித்ததில் பிடித்தது



V.கோவிந்தசாமி, 352/K302, Mechatronics Maintenance

கோவண உழவனை
வேடிக்கைப் பார்க்கின்றன
பேண்ட் அணிந்த
வயற்காட்டு பொம்மைகள்!

சிறைபட்ட காற்றுக்கு
சிறிய முள்ளால் விடுதலை....
``பஞ்சர்!''

நெல்லு போட்டோம்
கம்பு போட்டோம்
சோளம் போட்டோம்
போட்ட பணம்
எடுக்கல...
பிளாட் போட்டோம்
உடனடி விற்பனை!

சாதிக்கா பிறந்தோம்...?
இல்லை....
சாதிக்கப் பிறந்தோம்!

கொள்ளை போகும் இயற்கை வளம்



கி.சுரேஷ், 270/38313, சேசிஸ் அசெம்பிளி

            நாட்டின் ஆதாரமான இயற்கை வளங்கள், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் இழப்பை ஏற்படுத்துகிறது அரசு. மணல், சுரங்கம், இயற்கை எரிவாயு என இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய இயற்கை வளங்களை கொள்ளை போகவிட்டு மானிய வெட்டு, ரேஷன் முறை ரத்து என மத்திய அரசு மக்களின் மீது சுமை ஏற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. மத்திய ஆட்சியாளர்கள் 1998ஆம் ஆண்டு மக்கள் விரோதமான, பொறுப்பற்ற, ஒரு விபரீத முடிவை எடுத்தனர். மணல், சுரங்கம், இயற்கை எரிவாயு ஆகியவற்றை தனியாரும் கையாளலாம் என்றும், அந்நிய முதலீடு வரலாம் என்றும் நாடாளுமன்றத்திலும் விவாதிக்காமல் எடுத்த முடிவால், இன்று இயற்கை வளம் தனியார் முதலாளிகளால் கொள்ளை அடிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இணையத்தைக் (www) கண்டுபிடித்த அறிவியல் மாமேதை டிம் பெர்னர் லீ

S.உமாகாந்தன், 255/L210

            1990-ல் தொடங்கி உலகையே மாற்றி விட்ட மாபெரும் அறிவியல் விந்தையான இணையத்தை (ரர்ழ்ப்க்  ரண்க்ங் ரங்க்ஷ) கண்டுபிடித்தவர் டிம் பெர்னர் லீ. அதற்கான பெயரோ, புகழோ, வருமானமோ எதிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. இணையத்தை அனைவருக்கும் விலையின்றி சென்று சேர்ப்பிக்கும் கொள்கை உறுதி கொண்டவர். இந்த உலகமய உலகில் அறிவியல் அனைவருக்குமானது; இணையம் அனைவருக்குமானது என்று உரத்த குரலில் முழங்கியவர். ஒரு பில்கேட்சையும், ஒரு ஸ்டீவ் ஜாப்சையும் இன்னும் சில உலகக் கோடீஸ்வரர்களையும் உருவாக்கிய கண்டுபிடிப்பு. ஆனால் இதிலிருந்து மாறுபட்டவர் டிம் பெர்னர் லீ.