பரந்த உலகில் வாழும் மனிதனை
பாடாய்ப்படுத்திடும் பணமே!
உயிரோட்டமில்லா வாழ்க்கையிலே
பகட்டுடன் வாழ்வதற்கே
பகடையென உருண்டோடி
சூதும் வாதும் உறவு கொள்ள
சுழலும் சக்கரமாய்
உருமாறிய பணமே!
காசில்லா மனிதனையும்
கடனாளி ஆக்கிவிட்டு
கைமாற்றாய்த் தருபவனை
கடவுளாய் காட்டிவிட்டு
முதலாளியிடம் சேரும் முழு பணமும்
அவரை அம்பானி ஆக்குதடா!
உழைப்பினைச் சுரண்டி
ஓரிடம் சேரும் பணம்...
நிலையான இன்பத்தை
ஒரு போதும் தருவதில்லை!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா