K.N.சஜீவ்குமார், 217/37918
ஒரு பிரச்சனைக்கு முடிவு தேட வேண்டும் என்றால் அதன் அடி ஆழம் வரை செல்ல வேண்டும்
என்றார் காரல் மார்க்ஸ். இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான வேலை நாள் இழப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றின் ஆணிவேர் எது என்று ஆராய்ந்தால், அது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட
ஏகாதிபத்தியம்தான் என்பது நமக்குப் புரியவரும். அதனால்தான், உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பினை
முதன்மையாக வைக்கின்றனர். ஒரு நாட்டின் இறையாண்மையைக் காப்பதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
இன்று ஏகாதிபத்தியம் போரின்றி, தனியார் மயம், தாராள மயம், உலகமயம் மூலம் ஒரு நாட்டை சூறையாட முடியும்.
உலக மயம் என்பது அந்நிய மூலதனம் தங்குதடையின்றி உள்ளே வரவும், யாருடைய அனுமதியுமின்றி வெளியேறவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடாகும். டாலர் உள்ளே
வரும்போது ரூபாயின் மதிப்பு கூடுகிறது. அதுவே டாலர் வெளியேறும்போது ரூபாயின் மதிப்பு
வீழ்ச்சியடைகிறது. இதுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD - Current Account Deficit) : எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், எப்போது ஏற்றுமதையைவிட இறக்குமதி அதிகரிக்கிறதோ, அப்போது இஅஈ அதிகரிக்கிறது.
1990களில் அந்நிய செலாவணி கையிருப்பு, ஒரு வார காலத்திற்கு மட்டுமே நம் கையில் இருந்த போது, நாம் ஐஙஊ மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்க நேர்ந்தது. அந்தக் கடனைப் பெற இந்தியா
மீது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள்
மூலதனத்துக்குச் சாதகமாக மாற்றப்பட்டது. தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் இந்தியா ஏற்றுக் கொண்டது. தவறான நம் ஏற்றுமதிக்
கொள்கைகளால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. ஒருபுறம், உற்பத்தி செய்த விவசாயியும் தொழிலாளியும் பயன்பெறவில்லை. மறுபுறம் ஆடம்பரக் கார்கள், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரித்து, நடப்புக் கணக்கு பற்றாக்குறையில்
கொண்டு போய் சேர்த்துள்ளது.
தனியார் மயம் லாபநோக்கோடு வேலை வாய்ப்பைக் குறைக்கிறது. வேலை வாய்ப்பு குறையும்
போது பணப்புழக்கம் குறைகிறது. பணப்புழக்கம் குறையும் போது உள்நாட்டு தேவை குறைகிறது.
தேவை குறையும் போது உற்பத்தி குறைக்கப்படுகிறது. உற்பத்தி குறையும் போது லே-ஆப், ஆட்குறைப்பு உருவாகிறது.
இப்போது யோசியுங்கள். நம் தொழிற்சாலையில் பிரச்சனைகள்
வரும்போது போராடும் நாம், அந்தப்
பிரச்சனைகளுக்குக் காரணமான கொள்கைகளை எதிர்க்க வேண்டாமா? எனவே மூல
காரணமான ஏகாதிபத்தியத்தையும், அதற்குத் துணைபோகும் அரசாங்கத்தின் கொள்கைகளையும், முதலாளிகளின்
லாப வெறியையும் ஒட்டுமொத்தமாக எதிர்க்காமல் நமது தொழிற்சாலையை மட்டும் தனியாகப் பாதுகாக்க
முடியாது. அப்படிச் செய்ய முடியும் என்று நினைத்தால், நாம் நிழலோடு
யுத்தம் செய்பவர்களாவோம். ஆகவே, நோய் நாடி, நோய் முதல் நாடி என்று வள்ளுவப்
பெருந்தகை கூறியதைக் கணக்கில் கொண்டு செயல்படுவோம்! தேசம் காப்போம்!!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா