Thursday, 26 December 2013

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி, சித்த வைத்தியர்
8122309822

      1. பொன்முசுட்டை, சிறுகட்டுக்கொடி, ஆவாரை, வெள்ளைப்பூத்துத்தி, நாவல்விதை, சிறுகுறிஞ்சான், மாங்கொட்டைப் பருப்பு இவைகளைச் சம அளவில் எடுத்து, வெயிலில் காயவைத்து, நன்றாக இடித்து சூரணமாக்கி சலித்துக் கொண்டு 1\2 ஸ்பூன் வாயில் போட்டு ஆறிய வெந்நீர் அல்லது சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். காலை + மாலை மூன்று நாட்களில் அடிக்கடி சிறுநீர் போவது நிற்கும். நாட்பட்ட நீரிழிவு நோயாக இருந்தால், தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். ஆச்சரியப்படுமாறு நீரிழிவு எனும் சர்க்கரை வியாதி குணமாகும். இது 3 தலைமுறையாக அனுபவத்தில் பலன் கண்ட மருந்து.
ஆதாரம் : சோமானந்தா எனும் கொல்லிமலை அனுபவ சித்த மருத்துவம்.
குறிப்பு : மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் நாட்கள் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமை.

      2. மிளகு  5 கிராம், வெந்தயம் 50 கிராம், சீரகம் 50 கிராம் இந்த மூன்றையும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இவைகளை கலந்து கொண்டு காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் உணவுக்கு முன்பு 1\2 தேக்கரண்டி உட்கொண்டு 1\2 டம்ளர் வெந்நீர் அருந்தவும். தொடர்ந்து பல மாதங்கள் உட்கொள்ளலாம். இரசாயனம் கலந்த மருந்தைவிட இது மேலானது. இதுவும் கைக்கண்ட அனுபவ மருந்தாகும். இதில் சொல்லப்பட்ட நேரம் மிக முக்கியமானது.
      குறிப்பு : திடீரென்று சர்க்கரை அளவு 200க்கு மேல் போகும்போது பச்சை வெண்டைக்காயை 2 எண்ணிக்கை எடுத்து சிறு துண்டுகளாக்கி 2 டம்ளர் நீரில் போட்டு இரவில் ஊற விடவும். மறுநாள், காலையில் வழவழப்புடன் கூடிய வெண்டைக்காய் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். 1 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறைந்து சரியான அளவு வந்துவிடும். அதன்பிறகு மேற்கண்ட மருந்தை சாப்பிடலாம்.
      ஆதாரம் : பூர்வீகம் என்ற மாத இதழில் மருத்துவர் ஏ.நாகராஜன்
      குறிப்பு : மேற்கண்ட மருந்துகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (Can water) பயன்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா