இந்திய_அமெரிக்க துணைத்தூதர் கைது
விவகாரம் 2013ஆம் ஆண்டைப் பரபரப்பாக்கியது. இந்தியாவின் அமெரிக்காவிற்கான
துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை விசா மோசடி வழக்கில் அமெரிக்க அரசு கைது செய்து,
அமெரிக்க சட்டத்தின்படி, கைது செய்த நபரை ஆடை களைந்து
பரிசோதனை செய்வது போல தேவயானியும் பரிசோதனை செய்யப்பட்டார். இந்த விவகாரம் சம்பந்தமாக
இந்திய அரசு தன் கண்டனத்தையும், ஆட்சேபனையையும் தெரிவித்தது.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு இது போல் நடப்பது புதிதல்ல. ஏற்கனவே, நடிகர் ஷாருக்கான், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்
போன்றவர்களுக்கு இதே போன்ற அவமானத்தை அமெரிக்க அரசு வழங்கி உள்ளது. இந்தியர்கள் என்றால்
அமெரிக்காவுக்கு கிள்ளுக் கீரைதான். இந்தியர்களை அவமானப் படுத்துவதில் மற்ற நாடுகளை
விட அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இருந்தும் நம் இந்திய அரசுக்கு அமெரிக்காவின் மோகம்
குறையவில்லை. இந்தியாவின் எதிர்ப்பை வேறு கோணங்களில் ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.
அமெரிக்காவிற்கு 2010ஆம் ஆண்டு
சென்ற தேவயானி, தன்னுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இந்தியப்
பெண் சங்கீதா ரிச்சர்ட்_ஐ அழைத்துச் செல்கிறார். சங்கீதாவின்
அமெரிக்காவிற்கான விசா <அ_3 விசா>
அமெரிக்க அரசின் சட்டத்தின்படி பணிக்காக அழைத்து வரப்படும் நபரின் தங்குமிடம்,
ஊதியம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதன்படி சங்கீதாவின் மாத ஊதியம்
ரூ.2,79,000\_ என தேவயானி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் சங்கீதாவிற்கு
வழங்கிய ஊதியம் வெறும் ரூ.30,000\_ மட்டுமே. மேலும் சங்கீதாவிற்கு
பெறப்பட்ட அ_3 விசா என்பது தற்காலிகமான விசா ஆகும். அமெரிக்காவின்
பணிப்பெண்கள் சட்டத்தின்படி ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே
வேலை வாங்க வேண்டும். இதையும் மீறி ஒரு நாளைக்கு 18 மணி நேரம்
வேலை வாங்கினார் தேவயானி. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சங்கீதா அங்கு உள்ள
சட்ட ஆலோசனை மையத்தில் தன் புகாரைப் பதிவு செய்தார். அதன் பிறகுதான் மேற்கண்ட கைது
படலம் தொடங்கியது. இந்தியாவின் கண்டனத்திற்கு நாங்கள் சட்டத்தின்படி நடக்கிறோம் என்றது
அமெரிக்கா.
இந்தியாவில் இதுபோன்ற ஊதியக் குறைப்பு விவகாரங்கள் எல்லாம்
சாதாரண பிரச்சனையாகக் கருதப்படுகின்றன. மேலும், இங்கு அமைப்பு
சார்ந்த தொழிலாளர்களுக்கான சட்டங்களே இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. எனவே,
சங்கீதாவின் பிரச்சனையை மறந்து <மறைத்து>
தேவயானி அவமானப்படுத்தப் பட்டதை மட்டும் இந்திய அரசு பெரிதுபடுத்தியது.
இங்குள்ள பத்திரிகைகளும் தேவயானி கைது விவகாரத்தைப் பூதாகரமாக எழுதியதே ஒழிய,
சங்கீதாவிற்கு உண்மையான ஊதியம்
ஏன் வழங்கவில்லை என எழுத மறந்தன! துணைத் தூதர் என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்காமல் சாதாரணக்
குற்றவாளி போல் நடத்தி இருக்கக் கூடாது என்று சொல்லும் இந்திய அரசு, ஒரு அதிகார வர்க்கத்திற்கு குரல் கொடுக்கும் இந்தியா, தினந்தோறும் இலங்கையில் செத்து மடிந்தும், அவமானப்படுத்தப்
பட்டும், அரேபியாவில், ஆஸ்திரேலியாவில்,
சிங்கப்பூரில் என தொடர் இன்னல்களைச் சந்திக்கும் இந்தியர்களுக்கு ஏன்
இது போல் குரல் கொடுப்பதில்லை.
அமெரிக்கா தன்னை சரியாகவும், சட்டத்தின்படியாகவும்
நடக்கிறேன் என்று காட்டிக் கொள்கிறது. ஆனால் பல மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து இன்றும்
செய்து வருவது அமெரிக்காவின் இன்னொரு முகம் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் குறைந்தபட்ச ஜனநாயகம் இருப்பதால் சங்கீதாவின் ஊதிய விவகாரம் மேல் எழும்பியது.
இந்தியாவில் அதிகார வர்க்கம், தொழிலாளர்கள் என்று வரும்போது,
இந்தியா அதிகார வர்க்கத்திற்கே துணை நிற்கிறது என்பது இந்த தேவயானி,
சங்கீதா என்ற இரு இந்தியர்களின் பிரச்சனையில் காணலாம்.
எனவே, ஒரு விஷயத்தை ஆராயும்போது
காரியத்தை மட்டும் பேசாமல், அதற்குரிய காரணத்தையும் ஆராய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஒரு வர்க்கம் சார்ந்த நலன்
ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைத் தெரிந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்தியா
யார் பக்கம்?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா