Tuesday 11 March 2014

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி - சித்த வைத்தியர் - 99401 66297

      முருங்கைக் கீரைக்குத் தேவையான அளவு ஒரு ஸ்பூன் நல்ல சீரகத் தூள், 2 ஸ்பூன் தோலுடன் சேர்ந்த உளுந்துத் தூள் சேர்த்து, வேக வைத்து, மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தினமும் இது போல் சாப்பிட சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும், இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். காமாலை நோய், கல்லீரல் நோய் ஆகியவை தீரும். நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி (பலவீனத்தால் வருவது) தீரும்.
      வெள்ளை முள்ளங்கியைத் தேவையான அளவு வாங்கி சீரகம், உளுந்து, வெங்காயம், பூண்டு, துவரம்பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட, சர்க்கரை வியாதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சரியான அளவு வரும். மேலும் சிறுநீரகம் பாதிப்பு, கல்லடைப்பு, சிறுநீர் எரிச்சல் இவைகளும் தீரும்.

      பாகல் கீரை 100 கிராம், மிளகு 10 கிராம், சீரகம் 10 கிராம், இலவங்கப் பட்டை 5 கிராம், மஞ்சள் 10 கிராம், உளுந்து 20 கிராம் இவைகளை இளஞ்சூட்டில் வறுத்து, அம்மியில் அரைத்து துவையல் அல்லது சட்னியாக உணவில் மூன்று நாளைக்கு ஒரு வேளை, காலை உணவில் சேர்த்து வந்தாலே சர்க்கரை வியாதி வருவதில்லை. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு தினமும் சட்னியை உணவில் சேர்த்து வந்தாலே சர்க்கரை அளவு குறையும். இந்த நோயால் ஏற்பட்ட புண்கள் ஆறாதிருந்தால் ஆறிவிடும். கட்டிகளும் குணமாகிவிடும் (ஆதாரம் : சித்தர் அறிவியல் மருத்துவம் மாத இதழ்)
      தேவையான அளவு கேழ்வரகு எடுத்து சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற வைத்து,, அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்து, முளைவிட்ட பிறகு எடுத்து காய வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதை தேவையான அளவு எடுத்து கூழ் போல் வேக வைத்து, காலை உணவாக சாப்பிடலாம். இரவு ஏழு மணிக்கு கேழ்வரகு மாவில் கொஞ்சம் முருங்கைக்கீரை, கொஞ்சம் சீரகம் (சுத்தம் செய்தது) போட்டு அடை செய்து வேக வைத்து சாப்பிடலாம்.

      சர்க்கரை வியாதி வந்தவர்கள் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; இது மேலும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எட்டு போட்டு நடக்கும் நடைப்பயிற்சி மிகவும் நன்மை தரும். காலை 6 மணிக்குள் நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா