அ.பன்னீர்செல்வம் 261/36354
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பாட்டுடை கவி பாரதி கூற்று
தனியார் மயமாக்க கொள்கையிலே
தனி நபர் வளர்ச்சியை நோக்கியே
முதலாளித்துவ வர்க்கத்தின்
மூலதனமெல்லாம்
விழுதுகளின் வேர்விட்டு வளர்ந்திடவே
உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின்
வியர்வைதனை உறிஞ்சியே குடித்து
தன் கிளைகள் தனை பரப்புதடா
பூவாகி காயாகி பழுக்கின்ற
பலன்களெலாம்
தனியொருவன் செல்வாக்கில்
சொந்தமாகி போனதாலே
வேலையில்லாத் திண்டாட்டமும்
சமூகத்தில் தலைவிரித்தாடிவர
விலைவாசி உயர்வெல்லாம்
விண்ணை முட்ட செய்கையிலே
கலாச்சார சீர்கேட்டில்
மனம் தறிக்கெட்டுப் போகுதடா
பொது உடமை தத்துவத்தின் சித்தாந்த
தந்தையாம்
காரல் மார்க்சின் கொள்கையிலே
சமுதாய வளர்ச்சியின் தாக்கம்
சகலருக்கும் சென்றடைய
சந்தர்ப்பம் வாய்க்கின்ற
நாட்களெலாம்
வெகு தூரத்தில் இல்லையடா
வர்க்க உணர்வினில் போராடும்
எழுச்சிமிகு தொழிலாள போராட்டம்
வாழ்வுரிமை விழிப்புணர்வோடு
மலர்ந்திட
வீழ்வதும் நாளை வெல்வதற்கே!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா