Friday 20 June 2014

சிந்தனை ஈட்டி...

S.உதயகுமார்
629\F290
98401 99207

வாழ்க்கை என்பது மல்யுத்தம் போல்...
கீழே விழுவது தோல்வி அல்ல!
எப்போது நாம் எழுந்து கொள்ள
முயலவில்லையோ... அப்போதுதான் தோல்வி!
உறவுகள் அழகானவை... அற்புதமானவை...
நிபந்தனையில்லாமல் சிரிக்கும்போது!
உள்நோக்கமில்லாமல் பயணிக்கும்போது!
எதிர்பார்ப்பில்லாமல் உதவும்போது!
ஒரு பொருளின் விலைமதிப்பில்லா அருமை
இரண்டு முறைதான் வெளிப்படும்
ஒன்று... அந்தப் பொருள் நமக்குக் கிடைக்காதபோது!
மற்றொன்று... அந்தப் பொருளை நாம் இழக்கும்போது!
வறுமை... வாழ்க்கையின் பல கோடி பாடங்களைக் கற்பிக்கும்!
பணம்... பல கோடி அழிவுக்கான பாதையைக் காட்டும்!
நமது வாழ்க்கை எப்போது பொருள்படும் என்றால்
ஒரு சிலரின் நினைவுகளில் நாம் வாழும்போது...
ஒரு சிலர் நமக்காகப் பிரார்த்திக்கும்போது...
சில நேரங்களில் தெரியாத நபர்கள் மூலம் கூட சரியான பாடம் கற்கலாம்!
ஒருவரது ஈகோ... எந்த உறவையும் பிரிக்கவல்ல மிகப்பெரிய சக்தி கொண்டது!
அடுத்தவரின் தவறுக்காக கோபப்படும்போது உன்னை நீயே தண்டித்துக் கொள்கிறாய்!
வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைய தேவையானவை இரண்டு...
ஒன்று... ஒன்றுமே இல்லாத போது நிலைமையை சமாளிப்பது!
மற்றொன்று... எல்லாம் அடைந்த பின்பும் பணிவாய் நடந்து கொள்வது!

நண்பர்களே... நமது சிந்தனையை மெருகூட்ட, சமூகத்திற்காய் சிந்திக்க... சிந்தனை ஈட்டவே... இந்தச் சிந்தனை ஈட்டி...!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா