Wednesday, 20 August 2014

`பளிச்' கவிதைகள்

B.பத்மநாபன்
217\38465

விருட்சம்
சிறு விதைகளாய் இருப்பதால்
சிறுமை கொள்ளாதே
என்றாவது ஒருநாள்
பெரும் விருட்சமாக மாறுவோம்
கவலை கொள்ளாதே
அந்த நாளை நீ தள்ளிவிடாதே

மின்னல்
வானுக்கும்
மண்ணுக்கும்
இடையே நடக்கும்
மின்னஞ்சல்

நீர்வீழ்ச்சி
காண்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சி
பிறர் வீழ்வதை ரசிக்கும் மனிதன்
நதியையும் விட்டு வைக்கவிலை!

பொய் முகங்கள்
பாலாடையில் பால்குடித்தது முதல்
பாடையில் நாம் போகும் வரை
ஆடை மாற்றுவது போல் மாற்றுகிறோம்
வேஷங்கள் மாற்றுகிறோம்
மாறும் மனதிற்கேற்ப
மாறும் முகமூடிகள்...
முகமூடிகள் நிஜமானால்
நம்முகத்தை நாமே மறந்திடுவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா