M.பழனி
9952445378
செம்பிய மணலி
நூலகமே!
நீ ஒரு விதை நெல்...
உன்னுள் ஆரம்பமாகி வெளிப்படும்
ஒவ்வொரு கதிரும் நாளைய
தலைமுறையின் கல்தூண்கள்!
இப்போதெல்லாம் நீ
செல்லரித்து வீழ்வதில்லை
எங்கள் மனித குலம்
மூட நம்பிக்கைக்கு முக்காடு போட்டாலும்
அது முகம் மட்டுமாவது காட்டுகிறது.
நீ உடல் முழுதும் தரிசனம் தந்தும்
எங்கள் மனம் முக்காடு போட்டுக் கொள்கிறது!
விடியும்போது ஒவ்வொரு நாளும்
சூரியன் தோன்றுகிறதோ இல்லையோ
உன்னில் வெளிச்சம் வெளிப்படுகிறது!
கண்ணுக்குக் கண்ணாக
காத்து எங்களை வளர்க்கும்
நூலகமே... உன்னை விடவா
எங்களுக்கு வேறு ஆலயங்கள் வேண்டும்!
அதனால் தானோ என்னவோ
என் மனம் சிந்திக்கத் தொடங்கியது முதல்
உன்னை மட்டுமே ஆலயமாக
பூஜித்து வருகிறது!!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா