PF டிரஸ்டி
Mobile: 7845049992
பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு (1) P.F.செட்டில்மெண்ட் தொகை (2) கிராஜிவிடி தொகை (3) ரிட்டயர்மெண்ட் பெனிபிட் தொகை. ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளில் பணி நிறைவு பெறும் நாளன்று கிடைக்கும். இதில் P.F.செட்டில்மெண்ட் தொகை P.F.செக்சனில் அன்றைய தினம் காசோலையாகவோ அல்லது E.C.S. மூலமோ தரப்படும். கிராஜிவிடி தொகையும், ரிட்டயர்மெண்ட் பெனிபிட்டும் அன்றைய தினம் மாலையில் நடைபெறும் விழாவில் தரப்படும். ஓய்வு பெற்ற அடுத்த மாதம் 20 முதல் 25ந்தேதிக்குள் ஒரு மாத சம்பளமும், அதற்குண்டான P.F.-ம் கிடைக்கும். அடுத்து 3 மாதம் கழித்து Group Savings Linked Insurance (GSLI) மூலம் சுமார் ரூ.32,000\- கிடைக்கும்.
ஓய்வு பெறும் தோழர்கள் 40 நாள் முன்னதாக P.F.செக்ஷன் (அரசு பென்சன்) மற்றும் பெர்சனல் டிவிசனில் (எல்.ஐ.சி. பென்சன், கிராஜிவிடி) பென்சனுக்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொண்டு நிரப்பித் தர வேண்டும். இதில் P.F.பென்சனுக்காக (1) 7cm x 5cm அளவில் துணைவியாரோடு Joint Photo 3 காப்பியும், குழந்தைகள் 25 வயதுக்கு உட்பட்டு இருந்தால், Age Proof TC நகலும் தர வேண்டும். ஸ்டேட் பாங்க், I.O.B., இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளில் ஏதாவது ஒன்றில் E or S, SB Account open செய்து Bank Pass Book முதல் பக்கம் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை P.F.பென்சன் விண்ணப்பத்துடன் இணைத்துத் தர வேண்டும். ஓய்வு பெற்ற பின் 3 முதல் 4 மாதத்துக்குள் அரசு பென்சன் குறிப்பிட்ட வங்கியில் வழங்கப்படுகிறது. P.F.அலுவலகத்தில் இருந்து அறிவிப்புக் கடிதம் வந்தவுடன் வங்கியை அணுக வேண்டும். முதல் பென்சன் பெறும்போது வங்கியிடம் இருந்து பென்சன் ஆர்டர் கேட்டுப் பெற வேண்டியது அவசியம். அதே போல் பிரதி வருடம் நவம்பர் மாதம் Life Certificate வங்கியில் கையெழுத்திட்டுத் தர வேண்டும். இல்லையென்றால் ஜனவரி மாதத்தில் இருந்து பென்சன் நிறுத்தப்பட்டு விடும். அதன்பிறகு பென்சன் பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும். அதே போல் ஓய்வு பெறும் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மெடிகிளைம் திட்டத்தில் பணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால், வயதான காலத்தில் மருத்துவச் செலவுகளுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
தொழிலாளர் கவனத்திற்கு
P.F.வரம்பு 32% (12% + 20%) முதல் 42% (12% + 30%) வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர் ய.ட.ஊல் 30% வரை (சுமார் ரூ.9,000) சேமிக்கலாம். இதனால் மூன்று விதத்தில் நமக்கு நன்மை கிடைக்கிறது. (1) சேமிப்புத் தொகை நமது P.F.தொகையில் சேருவதால் ஓய்வுக்குப் பின் P.F.தொகை கணிசமாகக் கிடைக்கும் (2) அதற்கு 9% வட்டி தரப்படுகிறது (3) தற்போது 80இயில் ஒரு லட்சம் சேமிப்புத் தொகை ரூ.1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் சேமிப்புத் தொகைக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும். 5% உயர்த்தினால் சுமார் ரூ.1500 சேமிப்பு பிடித்தம் செய்யப்படும். என்ன நண்பர்களே... சேமிக்க ரெடியா?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா