R.ஜெயராமன், மாநிலப் பொருளாளர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின்
உற்பத்தியை, தங்கள் நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப் போதுமான
சந்தை இல்லாத நிலை உருவானது. ஆனாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம்
கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய
நாடுகளில் பொருளாதார நெருக்கடி வந்தது. மூலதனம் இத்தகைய நெருக்கடியில் இருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள அதற்குச் சந்தை விரிவாக்கம் தேவைப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில்
பெரிய சந்தையும், குறைந்த கூலிக்கு கூடுதல் தொழிலாளர்களும் கிடைத்தனர்.
விளைவு உலகமயம் என்கிற பெயரில் வளரும் நாடுகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியை போக்கிக் கொள்ள
அந்நாடுகளில் முதலாளிகள் திட்டமிட்டு செயல்பட்டனர்.