கி.சுரேஷ்
261\38313,
சேசிஸ் அசெம்பிளி
அரசியல்
பொருளாதாரம்
இது கடினமான, புரிந்து கொள்ள முடியாத வார்த்தையாகத்
தோன்றலாம். ஆனால் சமுதாயத்தில் இதைச் சாராமல் ஒரு மனிதனால் இருக்கவே முடியாது. எனக்கு
அரசியல் வேண்டாம்பா! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்! அரசியல் ஒரு சாக்கடை அதைப்
பத்தி பேசாதப்பா! என்று சிலர் தொடர்ந்து கூறி வருவதை கேட்காத நாளில்லை. அப்படி கூறும்
அனைவரும் ஓட்டுப்போடுவது, பிரச்சாரம் செய்வது, ஒரு கட்சியைச் சார்ந்து நிற்பது மட்டும்தான்
அரசியல் என்று நினைக்கின்றனர்.
ஆனால், உண்மையிலேயே சமூகத்தில் வாழும் மக்களின்,
வாழ்க்கை ஓட்டத்தின் அனைத்து அம்சங்களிலும், செயல்களிலும் அரசியல் கலவாது இல்லை. ஒரு
பென்சில் வாங்கினாலும் அதில் அரசியல் - பொருளாதாரம் என்னும் உட்கரு பொதிந்துள்ளது.
உண்மையிலேயே அரசியல் என்ற சொல் மக்களை மேம்படுத்தல் எனும் பொருளை உள்ளடக்கிய மேம்பட்ட
சொல்லாகும். ஆழ்ந்த பொருள் கொண்ட அரசியல் என்ற சொல்லிலே இன்று அரசியல் பண்ணிவிட்டார்கள்.
வெகுஜன மக்களுக்கு அரசியல் என்றதும் சில முதலாளித்துவக் கட்சிகள் செய்யும் தகிடு தத்தங்களும்,
ஊழல்களுமே நினைவுக்கு வருவதால் அரசியல் என்பதே முகம் சுளிக்கும் வார்த்தையாகவும், சாக்கடையாகவும்
மாறிவிட்டது.
``அரசியல்'' மேலே தெரியும் அழகான வீடு என்றால்,
அதற்கு அடித்தளமாக உள்ள கடக்கால் போன்றது ``பொருளாதாரம்''. இவை பிரிந்த வார்த்தைகள்
என்றாலும், ஒன்றையொன்று தீர்மானிக்கிற, நிர்ணயிக்கிற இணையான சொல் ஆகும். சமூகத்தில்
உள்ள மூலப் பொருட்களை
(ரா
மெட்டீரியல்ஸ்) வைத்து உற்பத்தி செய்ய சாதனங்கள் (மெஷின்ஸ்) பயன்படுத்தப்படுகிறது.
இந்த உற்பத்தி சாதனங்கள் யாருக்கு சொந்தமாக உள்ளதோ, உதாரணமாக முதலாளிகள் மூலப் பொருட்களையும்
உற்பத்தி சாதனங்களையும் வைத்திருக்கின்றனர். எனவே அவர்கள் தான் சமூகத்தின் பொருளாதாரத்தை
தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றனர்.
ஒரு பென்சிலைத் தயாரிக்க மூலப் பொருட்களும் சாதனங்களும்
மட்டும் இருந்தால் பென்சில் உருவாகாது. அதை உற்பத்தி செய்ய, வேலை செய்ய, உழைப்பு செலுத்த
தொழிலாளர்கள் வேண்டும். தொழிலாளி மூலப் பொருளையும், சாதனங்களையும் பயன்படுத்தி உழைப்பைச்
செலுத்தி பென்சிலை உருவாக்குகிறான். இப்படித்தான் உலகத்தில் அனைத்து பொருட்களும் உற்பத்தி
செய்யப்படுகிறது. மூலப் பொருளையும், கருவிகளையும் வைத்திருப்பவன் முதலாளி. அதன் மீது
உழைப்பு செலுத்தி பொருளை உருவாக்குபவன் தொழிலாளி. முதலாளி - தொழிலாளி என்ற உறவு உற்பத்தி
மூலம் வருவதால் இதை உற்பத்தி உறவுகள் என்கின்றனர். இந்த இரண்டும் சேர்ந்துதான் சமுதாயத்தின்
பொருளாதாரம் என்ற அடிப்படையான அம்சத்தை உருவாக்குகிறது. இந்தப் பொருளாதாரம் யாருடையது
என்றால், உற்பத்தி சக்திகளான மூலப் பொருளும், கருவியும் முதலாளிகள் கையில் வைத்திருப்பதால்
அவர்களே பொருளாதாரத்தையும் அதைச் சார்ந்த அரசியலையும் கட்டுகிறார்கள். இது முதலாளித்து
அமைப்பு முறை என்று அழைக்கப்படுகிறது. ஏங்கெல்ஸ் கூறியது போல இயற்கையின் விதியை (பரிணாமம்)
டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டு
பிடித்தார். மனித சமூக வளர்ச்சி விதி என்பது மேற்கண்ட அரசியல் பொருளாரம் யாருடையாதாக
இருக்கிறது. உண்மையில் யாருடையது என்பதைத்தான் மார்க்ஸ் கண்டுபிடித்தார்.
முதலாளியிடத்தில் உள்ள உற்பத்தி சக்திகள் பாட்டாளி
வர்க்கம் கையில் வரும்போது முதலாளித்து அரசியல் பொருளாதாரம், பாட்டாளிகளுக்கான அரசியல்
பொருளாதாரமாகவும், சோசலிச பொருளாதாரமாகவும் மாறும். அவ்வாறு மாறும்போதுதான் நாம் உழைப்பாளி
மக்களின் கையில் உள்ள அடிமை விலங்கை உடைத்து எறிய முடியும்.
அடுத்து... உபரி மதிப்பு...
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா