353
\ 36962
மின் சிக்கன வழிமுறைகள்
சிக்கனமும்
சேமிப்பும் எப்போதும் தேவை. மின்சாரத்தையும் நாம் சேமிக்க முடியும். எப்படி? இதோ...
சில டிப்ஸ்!
மின்சாரம்
சார்ந்த உபகரணங்களைத் தேவையில்லாத பொழுது சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் (உ-ம்: பல்பு,
மின்விசிறி). நம் வீடுகளில் உபயோகப்படுத்தும் டியூப் லைட், குண்டு பல்பு இவற்றுக்குப்
பதிலாக 11 வாட்ஸ், 18 வாட்ஸ்களில் கிடைக்கும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால்
மின்சாரத்தை சேமிக்கலாம். குண்டு பல்புகளைத் தவிர்ப்பதால் குளோபல் வார்மிங்கையும் குறைக்கலாம்.
நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர் முதலிவற்றில் டெம்பரேச்சர்
கட் ஆப் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
நாம்
உபயோகப்படுத்தும் ஏ.சி.-ஐ அறையின் அளவுக்கு தகுந்தார்போல் 1 டன், 1.5 டன் எனப் பயன்படுத்த
வேண்டும். அந்த அறையில் பால்ஸ் சீலிங்கிற்கு தர்மகோல் பயன்படுத்த வேண்டும். மேலும்
அதிகமான பொருள் இல்லாமலும், அறைக்குத் தானாக மூடித்திறக்கும் கருவியைப் பொருத்த வேண்டும்.
ரிமோட்டில் வேலை செய்யும் டிவி, டிவிடி, ஏசி, ஹோம் தியேட்டர் உபகரணங்களை பயன்பாட்டிற்குப்
பிறகு சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். ரிமோட் கண்ட்ரோல் மூலம் மட்டும் சுவிட்ச் ஆப் செய்ய
வேண்டும். இதனால் உபகரணத்தின் பயன்பாட்டிலிருந்து 30% முதல் 40% வரை மின்சாரம் சேமிக்கலாம்.
மின்சாரத்தைச் சேமிப்பது என்பது மின்சாரத்தை
உற்பத்தி செய்வதற்குச் சமம். எனவே, மின்சாரத்தை சேமித்து வீட்டிற்கும், தொழிற்சாலைக்கும்,
நாட்டிற்கும் நன்மை செய்வோம். மின்சார உபயோகச் செலவையும் குறைப்போம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா