S.ரகுபதி
221\C879
பப்பாளிப் பழம் இனிமையான சத்து மிகுதியான பழமாக
இருப்பதோடு. மிக மலிவாக கிடைப்பதாக இருந்தும், பெரும்பான்மை மக்கள் இந்தப் பழத்தை விரும்பிச்
சாப்பிடுவதில்லை. இந்தப் பழத்தை பற்றிய சில தவறான கருத்துகளே அதற்கு காரணம்.
பப்பாளிப் பழம் அளவுக்கு மீறிய சூட்டு இயல்பு
உடையதென்றும், இதைச் சாப்பிட்டால் இரத்த பேதி, சீத பேதி கோளாறுகள் ஏற்படும் என்றும்,
சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கர்ப்பிணிகள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கருச்சிதைவு
ஏற்படும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இம்மாதிரி கருத்துகள் மிகையானவை. அறியாமை காரணமாக
தோன்றியவை.
பப்பாளிப் பழத்தின் இயல்பு வெப்பம் என்பது உண்மை.
ஆனாலும், குடலை பாதிக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமான நிலையை கொண்டதில்லை. பப்பாளிப்
பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும் என்பதற்கான விஞ்ஞான ரீதியான ஆதாரம் ஏதுமில்லை.
பப்பாளிப் பழத்தின் சிறப்பு வேறு எந்தப் பழத்திலும்
இல்லாத அளவுக்கு வைட்டமின் `ஏ' அதிகமாக அமைந்திருப்பது தான். உடலில் நோய் தொற்றுவதைத்
தடுத்து, உடலுக்கு ஆற்றலை அளிப்பது இந்த வைட்டமின் `ஏ' தான். கண்கள் தொடர்பான நோய்
தீரவும், இரத்த வளம், இரத்த விருத்திக்கு பற்களின் உறுதிக்கும் பப்பாளிப்பழம் பயன்படுகிறது.
பப்பாளிப் பழத்தில் வைட்டாமின் `பி' சத்தும்
கணிசமாக உள்ளது. மனிதனுக்கு ஏற்படும் பலவித பாரிச வாயுக்கள், உடல் தோலில் உணர்ச்சி
மரத்துப் போதல், மூச்சு விடுதலில் சிரமம் இதற்கு வைட்டமின் `பி' குறைவே காரணம். ஆகவே,
பப்பாளி சாப்பிடுவதின் மூலம் இந்நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வராமல் தாமதித்தும்,
குழப்பமான கால அளவுடன் ஏற்படுவது உண்டு. இம்மாதிரி பெண்கள் இப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் மாதவிடாய் தொடர்பான கோளாறுகள் நின்று ஒழுங்காகும்.
டெங்கு காய்ச்சலுக்கு அருமருந்தாக இப்போது பப்பாளி
இலைச்சாறு பயன்படுவதாகத் தெரிகிறது. பப்பாளி இலைச்சாறு சாப்பிட்டதும் 45 எண்ணிக்கை
இருந்த பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்
குணமானது மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தைத் தந்ததாம்.
பப்பாளிப்பழம் பொதுவான உடல் ஆரோக்கியம், நோய்த்
தடுப்பு, உடலுக்குத் தேவையான சத்து போன்ற அனைத்தையும் அளிப்பதால் மக்கள் அப்பழத்தைச்
சாப்பிடுவதை ஒரு பழக்கமாகக் கொள்ள வேண்டும். பப்பாளி... சாப்பிடுவோம்... நோய் வருமுன்
தடுப்போம்... ஏனென்றால்...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா