ஹீலர் ஆர்.மாதவன், D.E.C.E., M.Acu., 353/37026
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர்,
செல் : 9840732871
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர்,
செல் : 9840732871
தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா
மனித உடம்பின் ஆரோக்கியத்தில் தோல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளுறுப்புகளுக்கு
பிராண சக்தியைக் கொடுக்கிறது. உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்கு படுத்துகிறது.
தோலின் வாயிலாகத்தான் உடம்பின் கழிவுப் பொருட்களும், பழுதடைந்த செல்களும் பெருமளவில் வெளியேற்றப்படுகின்றன.
தோல் நோய்கள் என பட்டியலிடப்படும் பொடுகு, டெர்மட்டிங், எக்சிமா,
எரிசிப்லப்லஸ், எரித்மா, இத்தியோசிஸ்,
இம்பெடிகா, எச்சில் தழும்பு, சைக்கொசிஸ்,
சிங்கிஸ், சொரியாசிஸ்,
கண்ணைச் சுற்றி கருவளையம். முகம் மற்றும் கணுக்கால் கறுத்துப்
போதல் என எந்த தோல் நோயாக இருந்தாலும் அது நம் உடல் உள்ளுறுப்புகளுக்குள் தேக்கி வைக்கப்பட்ட
நாள்பட்ட கழிவுகளை தோல் மூலமாக வெளித்தள்ளும் ஒரு கழிவு வெளியேற்றமே. இந்தக் கழிவுகள்
முறையாக வெளியேற ஒத்துழையாமல் மருந்துகளை உட்கொள்வதாலும்,
தோலின் மேல் பூசுவதாலும், பூசுகின்ற இடத்தில் மறைகிறது. பின் மற்றொரு பலவீனமான இடத்தில் புதிதாக நோய் தோன்றுகிறது.
தோல் நோய்க்கு முக்கிய காரணம் நாள்பட்ட மலச்சிக்கலும்,
சளியும்தான். முதலில் மலச்சிக்கலை சரி செய்ய பசித்து மட்டும்
சாப்பிட வேண்டும். இயற்கையான பழவகைகள் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண
தும்மல், சளி,
இருமல், நெஞ்சு
சளி இவற்றுக்கு மருந்துகள் உட்கொண்டு, அதை ஆஸ்துமா என்ற பெரிய நோயாக்கி, அதற்கும் மருந்துகள் உட்கொண்டு, நாட்பட்ட தோல்நோயாக காரணமாகிறோம். உடம்பில் தோன்றும் அதிகமான வலியுடன் கூடிய அரிப்பு,
எரிச்சல், ஊறல்
போன்றவற்றுக்கு எந்தவித மருந்துகள் ஆனாலும் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். நோய் குணமாகும்
வரை பால் உணவுகளையும், எண்ணெயில்
பொறித்த உணவுகளையும், மொறுமொறுப்பான
தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். தோல் நோய்க்கென்று தனியாக ஸ்பெஷல் சோப்பு,
பவுடர் கண்டிப்பாகப் போடத் தேவையில்லை. அதிக அரிப்பு இருக்கும்
போது அந்த இடத்தில் சொரிந்து கொள்ளாமல் சிறிதளவு தேய்த்து விடுதல் நல்லது. கிருமிகளால்
ஒரு போதும் தோல் நோய்கள் தோன்றுவதில்லை. எந்த வகையான தோல் நோயாக இருந்தாலும் அவை எதுவும்
தொற்று நோயல்ல.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா