இனியவன் ஜி.ஸ்ரீதர், 256/38176
ப்ரீபெய்டும்
போஸ்ட் பெய்டும் வந்தது...
கடிதம் காலாவதி ஆனது!
மின்னஞ்சலும்
குறுஞ்செய்தியும் வந்தது...
தந்தி தொலைந்து போனது!
ஏர்டெல்லும்
ஏர்செல்லும் வந்தது...
சிட்டுக்குருவி பட்டுப் போனது!
பீட்சாவும்
பர்கரும் வந்தது...
கேழ்வரகும் கேட்பாரற்றுப் போனது!
ஜீன்சும்
டீ சர்ட்டும் வந்தது...
கைத்தறி திசை தெரியாமல் போனது!
பெப்சியும்
கோக்கும் வந்தது...
கோலி சோடா காலியானது!
கிரானைட்டும்
மார்பிளும் வந்தது
மலைகளே காணாமல் போனது!
தனியார் மயம்
தாராளமயம் வந்தது...
விவசாய நிலமும்
தொழிலாளர் நலமும்
இயற்கை வளமும்
ரூபாய் மதிப்பும்
இந்தியாவின் இறையாண்மையும்
மொத்தமாய்க் காணாமல் போனது!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா