தனசம்பத் 255/J144
பயிர் வளர்க்கும் கழனியிலே
பாய்ச்சுகிற நீர் அதுவும்
வேரிடம் செல்லாது
வேறிடம் சென்று விட்டால்
விளைச்சலை எதிர்நோக்கும்
விவசாயி நிலை என்ன?
வாக்குறுதி அள்ளி வீசி
வாக்குகள் பல பெற்று
வாகை சூடியவன் வாதிடுவான்
என மலை போல் நம்பியதை
பொய்யாக்கி விலை போனால்
நம் எதிர்கால நிலை என்ன?
பார் போற்ற புகழ் பெறுவான்
பாசமிகு நம் செல்வன்
பகல் கனவு கண்ட தாய்
`பார்' போற்ற வாழுவதாய்
பலர் கூறக் கேட்கையிலே
பெற்ற மனம் படுகின்ற
பரிதாப நிலை என்ன?
பகல் இரவு பாராது
கடினமாய் உழைத்திட்டு
படிப்பதனை முடித்த பின்பு
வேலை தேடி செல்கையிலே
`நியூ டெக்னாலஜி' என்கிற
தாம் தந்த பிராஜக்டே
தனக்கெதிராகி விட்டால்
விடியலை நோக்கும்
படிப்பாளி நிலை என்ன?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா