Tuesday, 15 October 2013

Boss - புதுவரவு

ஆனந்த நாராயணன் 275/L192

            அசோக் லேலண்ட் நிறுவனம், தன் புதிய இடைநிலை வணிக வாகனமான (ஐசிவி) பாஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ட்ரக்கின் வலிமையும் ஒரு காரின் வசதியும் ஒருங்கிணைந்த வாகனமாக திகழ்கிறது பாஸ்.

            செயல்திறன், வசதி, நம்பகத்தன்மை போன்றவைகளின் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது பாஸ். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் லாபத்தை உறுதிப்படுத்துவதுடன் எங்களுக்கும் ஒரு கேம் சேஞ்சராக (எஹம்ங் இட்ஹய்ஞ்ங்ழ்) இருக்கும் என்று அறிமுக உரையில் கூறினார் அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி.

            ஐரோப்பிய டிசைன் கொண்ட கேப் (இஹக்ஷ) மற்றும் உள்நாட்டு டிரைவ்லைன் மூலம் இந்திய மதிப்பில் உலகத்தரத்தை வழங்குகிறது பாஸ். 40,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தால் போதும் என்றும், ஹைட்ராலிக் பவர் ஸ்டியரிங் சிஸ்டம், 15.3 மீட்டர் டர்னிங் ரேடியல், கேபினுக்கு மூன்று வருட வாரன்டி, பின்பக்க எல்இடி லைட்களுக்கு, 5 வருட மாற்றத்தக்க கியாரண்டி போன்ற இத்துறையிலேயே முதல் முறையாக பல சிறப்பம்சங்களை பாஸ் கொண்டுள்ளது.

            பாஸ் எல்.இ., மற்றும் எல்.எக்ஸ். வகைகளில் வருகிறது. பாஸ் எல்.இ.யில் 120 பி.எஸ் எச் சீரில் பிஎஸ்3 இன்ஜின், இன்லைன் ப்யூவல் இன்ஜெக்ஷன் பம்ப், இப்பிரிவுகளிலேயே அதிகபட்ச மைலேஜ் கொடுக்கும் 6 ஸ்பீட் ஓவர் ட்ரைவ் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

            பாஸ் எல்.எக்ஸ்.இல் 130 பிஎஸ் காமன் ரயில் (இர்ம்ம்ர்ய் தஹண்ப்) இன்ஜெக்ஷன் இன்ஜினுடன் பேட்டரியில் பொருத்தப்பட்ட ஏசியும் வருகிறது. இதன் மற்றொரு சிறப்பம்சம் இதிலும் ஆட்டோமேட்டட் மானுவல் ட்ரான்ஸ்மிஷனாகும். இப்பிரிவு வாகனங்களில் இல்லாத இவ்வசதியினால் கிளட்ச் செயல்பாடு மற்றும் கியர் மாற்ற வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

            அசோக் லேலண்ட் பாஸ் ட்ரைவ்லைனுக்கு, 2 ஆண்டு முழு வாகன வாரண்டி மற்றும் கூடுதலாக 2 ஆண்டு வாரண்டியை வழங்குகிறது அசோக் லேலண்ட் நிறுவனம். மேலும், 450 முழுமையான சர்வீஸ் அவுட்லெட்கள், விற்பனைக்கு, பிந்தைய சர்வீஸ் பேக்கேஜ், ஆக்சிடென்ட் ரிப்பேர் உத்தரவாதம் ஆகியவை வாடிக்கையாளர்களின் தொழிலுக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றன.

            ஆர்ள்ள் நமது நிறுவனத்தின் புது வரவு!
            நமது மதிப்பை நிச்சயம் உயர்த்தும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா