S.உமாகாந்தன், 255/L210
1990-ல் தொடங்கி உலகையே மாற்றி விட்ட மாபெரும் அறிவியல் விந்தையான இணையத்தை (ரர்ழ்ப்க் ரண்க்ங் ரங்க்ஷ) கண்டுபிடித்தவர் டிம் பெர்னர் லீ. அதற்கான பெயரோ, புகழோ,
வருமானமோ எதிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. இணையத்தை அனைவருக்கும்
விலையின்றி சென்று சேர்ப்பிக்கும் கொள்கை உறுதி கொண்டவர். இந்த உலகமய உலகில் அறிவியல்
அனைவருக்குமானது; இணையம் அனைவருக்குமானது என்று உரத்த குரலில் முழங்கியவர். ஒரு
பில்கேட்சையும், ஒரு ஸ்டீவ் ஜாப்சையும் இன்னும் சில உலகக் கோடீஸ்வரர்களையும்
உருவாக்கிய கண்டுபிடிப்பு. ஆனால் இதிலிருந்து மாறுபட்டவர் டிம் பெர்னர் லீ.
அமெரிக்க வர்த்தக உலகின் வியாபார நோக்கங்களுக்கு எதிராக இணையத்தை கட்டமைத்ததாக
லீ ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். இணையம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால் நோபல்
உட்பட எந்தப் பரிசும் அவரைத் தொடவில்லை. இணைய குழுமம் என்ற அமைப்பை உருவாக்கி, இணையப் பயன்பாடு பணம் ஈட்டும் அவலமாக மாறக்கூடாது என்பதில் அவர் காட்டிய பிடிவாதம், இணையத்தின் பயன்பாட்டை வெகுஜன மக்களுக்கு எடுத்துச் செல்லப் போராடும் ஒருவராய்
மாற்றிவிட்டது.
இவ்வளவு பெரிய விஷயத்தைக் கண்டிபிடித்த நீங்கள் உலகப் புகழ்பெற வேண்டாமா என்று
ஒரு நிருபர் பேட்டியில் கேட்ட போது, ``பலரும் நினைப்பதைப்
போல நான் பெரிதாக எதையும் செய்துவிட வில்லை. ஒரு குளிர்சாதனப் பெட்டி மின் ஊக்கியைப்
பயன்படுத்தி இயங்குகிறது. அதுபோல கணினி இயலில் உலகெங்கும் கணினிகள் இருந்தன. அவற்றை
இணைத்து ஒரு பயன்பாட்டை உருவாக்கினேன். அவ்வளவுதான்'' என்று கூறினார். 'அப்பா... எவ்வளவு தன்னடக்கம்'.
அமெரிக்காவின் கணினி வர்த்தக வெறிக்கு இந்த கண்டுபிடிப்பு ஆளாகிவிடக் கூடாது என்பதிலும், அது பொதுப் பயன்பாட்டில் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதிலும்
கவனமாக இருந்தவர் லீ.
1991 ஆகஸ்ட் 6ல் இணையத்தை அறிமுகம் செய்தார். இப்படியான இன்றைய இயங்கு உலகின்
சொல்லாடல்களை அளித்த டிம் பெர்னர் லீ. எந்த வியாபாரக் குழுவுக்கும், நாட்டுக்கும் தனிப்பட்ட சேவை புரியாது. அனைவருக்குமான உரிமைகளின் நடுநிலையை இணையம்
பாதுகாத்திடவும், தகவல் தொடர்பு மொபைல் பேசிகள் மூலம் தற்போது நடப்பது போலவே, எளிய வெகுஜன மக்களுக்கு சென்றடையவும் பிரம்மாண்ட தேவை நோக்கி உழைக்கிறோம். இணையம்
மட்டுமல்ல,
அறிவியல் என்பதே நம் அனைவருக்குமானதுதான்!'' என்கிறார்.
எப்பேர்ப்பட்ட அற்புத மனிதர், அறிவியல் ஆசான் டிம்
பெர்னர் லீ!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா